kopay palanai kannakai amman kovil

கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Featured Post Today
print this page
Latest Post
எம்மைப்பற்றி
யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.

ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.

குளிர்த்தி வைபவத்தன் போது

0 comments

கிராமதரிசனம்


0 comments

மாபெரும்குளிர்த்தி வைபவம்

கோவையம்பதி பலானை கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் கண்ணகை அம்பாளுக்கு 19.04.2015 கிராமதருசனமும் 20.04.2015 திங்கட்கிழமை மாபெரும்குளிர்த்தி வைபவம் சிறப்பாக நடைபெற தாயவளின் அருள்பாலித்துள்ளது. அடியார்கள ஆச்சாரசீலர்களாக வந்து அருள்கடாட்சத்தை பெற்றுய்வீர்களாக.
0 comments

இனிய தமிழ் புத்தாண்டு மன்மத வருஷ நல் வாழ்த்துக்கள்.

தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள்புரிவாள் கண்ணகைதாய். மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் தாயவளின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.

இந்த மன்மத வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும். தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தும் நம் இல்லம் தேடி வரும்.
0 comments

இரண்டாம் பங்குனி திங்கள்

கோவையம்பதி பலானை கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் இரண்டாம் பங்குனி திங்கள் உற்ஸவம் உயரிய முறையில் அம்பாள் திருவருளால் நடை பெற்றது சில புகைப்பட பதிவுகள்
0 comments

மானம்பூ திருவிழா காணொளிவாயிலாக

நவராத்திரி விழாவை முன்னிட்டு  (03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும்  காணலாம். 

முதலாம் இணைப்பு - http://www.kopaykannakaiamman.com/2014/10/blog-post.html


0 comments

மானம்பூ திருவிழா


நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று(03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம். 
1 comments

பூங்காவனம் காணொளிவாயிலாக

பூங்காவனம் காணொளிவாயிலாக
0 comments

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக
0 comments

பூங்காவனம்

புண்ணியப்பதி கோவைத் தாய் கண்ணகையம்மை பூங்காவனம் காணவாரீர்!!
0 comments
 
பலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
Copyright © 2014. kopay palanai kannakai amman kovil - All Rights Reserved